நடிகர் பாலய்யாவிற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு!
Actor Balayya to be honoured with Padma Bhushan
நடிகரும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினருமான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம். இதையடுத்து இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பிரித்து வழங்கப்படுகின்றன.
மேலும் பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய நேற்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடிகரும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினருமான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு (பாலய்யா) பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Actor Balayya to be honoured with Padma Bhushan