இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தற்போது முடிவடைய உள்ள நிலையில், இதனுடைய இரண்டாம் பாகம் குறித்த புரோமோவும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த புரோமோவில், முதல் பாகத்தில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலின் மட்டுமே இரண்டாம் பாகத்தில் இருப்பது போல் உள்ளது. 

மற்ற நடிகர்கள் யாரும் இரண்டாம் பாகத்தில் தொடரவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, "முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிதளவில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மூலம் புகழ் கிடைத்துள்ளது. 

இதன் மூலம், அவர்களுக்குத் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகளும் கிடைத்திருப்பதால் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளனர். இதனால், சேனல் தரப்பினரும் அவர்கள் மீது கோபத்தில் இருப்பதால் இரண்டாம் பாகத்தில் புதியவர்களை வைத்தே தொடங்கலாம் என்று முடிவெடுத்து சீரியலை தொடங்கியுள்ளது.

இந்த தொடரின் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் தற்போது விஜய் டிவியின் 'கிழக்கு வாசல்' சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல், சரவண விக்ரம் பிக் பாஸில் இருக்கிறார். 

முதல் பாகத்தில் நடித்த ஹேமா இரண்டாம் பாகத்திலும் தொடர்வார் என்றுத் தெரிகிறது. இதனால், இரண்டாம் பாகத்தின் வாய்ப்பை சுஜிதா மற்றும் குமரன் மறுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandian stores 1 serial actors avoide part 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->