சேலத்தில் பரபரப்பு சம்பவம்.. விஜய் பட நடிகர் மீது சரமாரியான தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய்யின் 'திருப்பாச்சி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் பெஞ்சமின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நடிகர் பெஞ்சமின் தனது மோட்டார் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு 'கூகுள் பே' மூலம் 350 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், அவருடைய வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து அவர் பங்க் ஊழியர்களிடம் கேட்டதில் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது‌. இதில் பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெஞ்சமினை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bunk employee attack actor Benjamin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->