பிரேமலு மூவியின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
piremalu movie ott release
மலையாளத்தில் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவான பிரேமலு படத்தில், நஸ்லன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் மற்றும் சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்த படத்தை பாவனா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. விஷ்ணு விஜய் இசையில் உருவான இந்தப் படம் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தற்போது வரை இந்தப் படம் மலையாளம் தெலுங்கு என்று இந்த ரூ.134 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இதுவரை அதிக வசூல் செய்த தெலுங்கு டப்பிங் செய்யப்பட்ட மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘Disney Plus Hotstar‘ பெற்றுள்ளது. அதன்படி, இந்தப்படம் வருகின்ற 12-ம் தேதி ஓடிடியில் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
English Summary
piremalu movie ott release