"மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்" - கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சென்னையில் நடந்த படிக்காத பக்கங்கள் படநிகழ்சியில் கவிஞர் வைரமுத்து பேசும்போது இசையை விட , மொழிதான் பெரிது என்று குறிப்பிட்டிருந்தார். இளையராஜா பாடல்கள் தனக்கு சொந்தம் என்று உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் இளையராஜாவை தான் வைரமுத்து தாக்கி பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வைரமுத்துக்கு இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் வைரமுத்து நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரல் ஆகிவருகிறது. அதில்,குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும். புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poet Vairamuthu post on X site


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->