நடிகைகள் குறித்து பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் - ஆவேசத்தின் உச்சியில் வைரமுத்து.! - Seithipunal
Seithipunal


கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய "சேலத்திற்கு பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

“ஒருவருடைய புகழும், விளம்பரமும் நல்ல முயற்சியில்தான் வர வேண்டும். தீய செயலால் வளர்ந்தால் அது வளர்ச்சி கிடையாது. இளைஞர்கள் நல்ல விதமாக வளர முயற்சி செய்ய வேண்டும். நடிகைகளை ஆபாசமாக சித்தரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மனிதகுல வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை தவறாகப் பயன்படுத்துவதை பெண்மைக்கு செய்யப்படும் இழிவு என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், கலையுலகச் சகோதரிகளுக்கு ஏற்படக்கூடிய தலைகுனிவு என்று நினைக்கிறேன்.

எந்தவொரு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்கும் ஒரு தீமை உண்டு. அதைக் கடந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக வளர்ந்து வரும் பட்சத்தில் உலகம் இரண்டாக பிளவுபடும்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poet vairamuthu speech in book published function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->