நயன்தாராவுக்கு பின் இவர்தானா.?! அதிக சம்பளம் வாங்கும் விஜய் பட ஹீரோயின்.! எத்தனை கோடி தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் முகமூடி. இதுவரை படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார். தமிழில் இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

தெலுங்கு படங்களுக்கு நடிக்க சென்ற பூஜா ஹெக்டே எதிர்பாராத அளவிற்கு வெற்றியைப் பெற்றார். அவரது வெற்றி தமிழிலும் அவருக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

இவரது புட்ட பொம்மா அப்பாடல் தென்னிந்திய சினிமாவிலேயே மிக சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னர், மீண்டும் தமிழ் திரைப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது சமீபத்தில் வெளியிட்ட தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜா ஹெக்டே தெலுங்கில் ஜனகணமன படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக ரூ.5 கோடி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவுக்கு மட்டுமே ரூ.4 கோடி என்று அதிக சம்பளம் பேசப்பட்ட நிலையில், அவருக்கு பின் பூஜா ஹெக்டேவுக்கு தான் அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளது.

மேலும் தல அஜித் நடிப்பில் உருவான வீரம் திரைப்படம் ஹிந்தியில் கபி ஈத் கபி தீவாளி என்ற பெயரில் ரீமேக் ஆகும் நிலையில், சல்மான் கான் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja hedge salary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->