அந்த நடிகருடன் நடிக்க முடியாமல் போனதால் துவண்டுபோன பூஜா ஹெக்டே.! அவரே தெரிவித்த தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம்தான் ராதே ஷ்யாம். நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். 

அப்போது ஹீரோயின் பூஜா ஹெக்டே," இந்தத் திரைப்படத்திற்காக 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளோம். இது ஒரு ஆழமான காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்காக பல துன்பங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம். மிகவும் பிரம்மாண்டமாக இந்த படத்தினை தயாரிப்பாளர் உருவாக்கியுள்ளார். 

எனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், என்னால் சத்யராஜுடன் நடிக்க முடியாமல் போனது தான் வருத்தம் அளிக்கிறது. ஹீரோவாக நடித்த பிரபாஸ் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja Hegde about radhe shyam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->