நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!!! செபி திடீர் முடிவு...
Appeal against court order SEBIs sudden decision
அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி பச் மீது குற்றம் சாட்டி இருந்தது. இவர் அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மாதவி பூரி பச் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனால் செபி முன்னால் தலைவர் மாதபி பூரி பச் மற்றும் ஐந்து பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி உத்தரவு:
மேலும் இவர்கள் மீது பங்குச்சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக செபி அறிவித்துள்ளது . விளையாட்டுத்தனமான மனு மீது நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது .
செபி:
மேலும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செபி தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாகச் செபியிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படாமல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகச் செபி குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
Appeal against court order SEBIs sudden decision