'Anora' Oscars2025 - சிறந்த திரைக்கதை மற்றும் படத்தொகுப்புக்கான விருதை வென்றது....
Anora wins Oscars2025 Best Screenplay and Film Editing
உலகளவில் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலமானவை என்பது அனைவரும் அறிந்தவை. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கிக் கௌரவப்படுத்தும் வழக்கம் உள்ளது. இது கடந்த 96 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ்யில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

ஆஸ்கர் விருதுகள்:
இதில் ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் பட்டியல் இனி காணலாம். சிறந்த அனிமேடட் படத்திற்கான விருதை flow திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேடட் குறும்படத்திற்கான விருதை In The Shadow of The Cyprus குறும்படம் வென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை wicked திரைப்படத்திற்காக paul tazewell வென்றார். இவர்தான் ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை Anora திரைப்படம் வென்றது. சிறந்த துணை நடிகருக்கான விருதை Kieran culkin வென்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்காண விருதை Conclave திரைப்படம் வென்றது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை The substance திரைப்படம் வென்றது. சிறந்த துணை நடிகைகாண விருதை Emilia perez படத்திற்காக zoe saldana வென்றார்.
அனோரா:
சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை அனோரா திரைப்படத்திற்காக scan baker வென்றார். சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை Wicked திரைப்படம் என்றது. சிறந்த பாடலுக்கான விருதை El mal பாடல் வென்றது.
English Summary
Anora wins Oscars2025 Best Screenplay and Film Editing