'நெற்றியில் பொட்டு வைப்பது சங்கிகளின் அடையாளம்: கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்'; ஆ.ராசா பேச்சு..!
A.Rasa speech says that putting a dot on the forehead is a sign of Sangis
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது; கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை என்றும் . நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம் என சர்ச்சையாக பேசியுள்ளார்.
அத்துடன், கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கொள்ளை இல்லாமல் போனால் அந்த கட்சி அழிந்து போய் விடும். அப்படி அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் அதிமுக என்று ஆ. ராசா பேசியுள்ளார்.
English Summary
A.Rasa speech says that putting a dot on the forehead is a sign of Sangis