மைடியர் பூதம் பாடலின் புரோமோ வெளியீடு.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஃபுரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியது.

தற்போது இவர் நடித்துள்ள தேள், பஹுரா யங் மங் சங் திரைப்படங்கள் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் என் ராஜீவன் இயக்கத்தில் மைடியர் பூதம் என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த டத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மை டியர் பூதம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஃபுரோமோ வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhu Deva in my dear Bootham 1st single promo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->