ஹனிமூனில் பிரசன்னா சிநேகாவிடம் கேட்ட 'அந்த' விஷயம்... அதுக்கு சிநேகா போட்ட 'கண்டிஷன்'.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் பிரபலமானவர்கள் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா. இந்த ஜோடியை கடந்த 2012 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

திருமண வாழ்க்கைக்கு பிறகு சினேகா திரைப்படங்களில் அனேகமாக நடிக்கவில்லை என்றாலும் ஒன்று இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பிரசன்னா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திருட்டுப் பயலே 2 திரைப்படம் பிரசன்னாவிற்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

திருமணமான புதிதில் இந்த தம்பதியினருக்கு இடையே நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்த நிகழ்வை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் அவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்தனர். அது அங்கிருந்த ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது என்றால் மிகையாகாது.

திருமணம் முடிந்தப்பின் பிரசன்னா மற்றும் சினேகா தேனிலவிற்காக நியூசிலாந்து சென்றிருக்கிறார்கள். அங்கு பங்கி ஜம்ப் செய்ய வேண்டும் என பிரசன்னா கேட்டிருக்கிறார் ஆனால் தன்னுடைய பெயரை டாட்டூ போட்டால் தான் பங்கி ஜம்ப் செய்ய சம்மதிப்பேன் என சினேகா கூறியிருக்கிறார். உடனே அவருக்காக டாட்டூ ஸ்டுடியோ சென்று சினேகாவின் பெயரை பச்சை குத்தி வந்திருக்கிறார் பிரசன்னா. அதன் பிறகு இருவரும் குஷி படத்தில் விஜய் குதித்தது போல் பங்கி ஜம்ப் செய்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanna did ths for his lovey wife neha to join in bungee jump


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->