ரீ ரிலீசுக்கு தயாரான ''பிரேமம்'': வைரலாகும் போஸ்டர்!
Premam rerelease update
கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் 'பிரேமம்'.
இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராஜேஷ் முருகன் இசையமைத்த இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மலையாள சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை உருவாக்கியது. இந்நிலையில் மலர் டீச்சரை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இந்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, பிரேமம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.