திடீரென பாஜகவில் இணைந்த தமிழ் சினிமாவின் பெரிய புள்ளி!
Producer come actor Pyramid Natarajan Joined BJP
தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற தயாரிப்பாளரும், நடிகருமான பிரமிட் நடராஜன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், உதயா, பிஸ்தா, ரிதம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவருமான பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைந்த பிரமிட் நடராஜன், பாஜகவில் சேர்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மத்தினை கடவுள் தலைகாக்கும் , இப்போது அந்த கடவுள் மோடி ரூபத்தில் அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறார் என பேசினார்.

மேலும் எனக்கு இருக்கின்ற பெயர், தொடர்புகளை பாஜகவினை வலுப்படுத்த பயன்படுத்துவேன். தற்போது ராமராக இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கு ஒரு அணிலாக என்னால் இயன்ற பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Producer come actor Pyramid Natarajan Joined BJP