திருச்சி ரயில்வே அறிவித்த ரெயில் மாற்றம் அறிவிப்பு...! காரணம் என்ன...?
Trichy Railway announced train change announcement
திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தற்போது செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில்,"மதுரை ரெயில்வே கோட்டத்தில், பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் சில மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில், செங்கோட்டையிலிருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16848) நாளை அதாவது திங்கட்கிழமை விருதுநகர் ரெயில் நிலையம் வந்து கல்லிகுடி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், திண்டுக்கல், மதுரை, கொடைக்கானல் ரோடு, வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது.
அதற்கு பதிலாக விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, புதுக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும்" என அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் இதற்கு ஏற்றவாறு பயணங்களை மேற்கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Trichy Railway announced train change announcement