பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் - திருவண்ணாமலையில் பரபரப்பு.!!
school student pregnent in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் அருகே சோதிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன். இவர் மாங்கால் கூட்ரோடு சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
அதன் பின்னர், ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் தனிமையில் இருக்கும் போது உல்லாசமாக இருந்துள்ளார். அதனால், மாணவி கர்ப்பமானதால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவம் குறித்து சிறுமியிடம் கேட்டபோது கர்ப்பத்துக்கு ரவிச்சந்திரன் என்பவர் தான் காரணம் என்றுத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
English Summary
school student pregnent in thiruvannamalai