அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து - தீவிர விசாரணையில் போலீசார்.!!
fire accident to mumbai enforcement department
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இயங்கி வந்த அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் படி 12 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், இந்தத் தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
fire accident to mumbai enforcement department