ரேஷன் பருப்பில் கலப்படம்...! விநியோகித்த தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு...!
Adulteration ration pulses Order inspect private companies that distributed them
திண்டுக்கலில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை, அம்மாவட்ட கலெக்டர் ஆய்வின்போது கண்டுபிடித்தார்.

இந்தக் கலப்படத்திற்கு காரணமான இருந்த இரு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சூழ் நிலையில், குழம்பு பருப்பில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுதுமுள்ள வாணிப கழக கிடங்குகள், நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,அனைத்து பருப்பின் மூட்டைகளையும் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு 'உணவுத்துறை' உத்தரவிட்டுள்ளது.இந்தக் கலப்பட பருப்பை அரசுக்கு வழங்கிய 5 தனியார் நிறுவனங்களை விசாரிக்கவும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தற்போது அம்மாவட்டத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Adulteration ration pulses Order inspect private companies that distributed them