ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம் வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2 திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

மேலும், இவர் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இதனிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் வெளியாக இருந்த நிலையில், இந்த படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் படத்தின் டப்பிங் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தி டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி கூடுதல் பணம் கேட்டு ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 24ம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghava Lawrence's film Rudran banned release Madras High Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->