SRH-அணியில் நல்ல வீரர்களை எடுங்க.. ஜெயிலர் மேடையில் காவ்யாமாறனை கலாய்த்த ரஜினி.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைவரும் ஒவ்வொருவராக பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கடைசியாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் குழும தலைவரும், ஜெய்லர் படத்தின் தயாரிப்பாளருமான கலாநிதிமாறனிடம் ஒரு அன்பு கோரிக்கையை ரஜினிகாந்த் வைத்துள்ளார்.

அதில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சன் குழுமத்தின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நல்லவர்களை கலாநிதி மாறன் தேர்வு செய்ய வேண்டும். வீரர்கள் மோசமாக விளையாடும்போது காவியாவை அப்படி சோகமாக டிவியில் பார்க்க வருத்தமாக இருக்கிறது என கலகலப்பாக பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு கலாநிதி மாறன் காவியா மாறன் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகத்தை காவியா மாறன் தான் கவனித்து வருகிறார். அதன்படி அணியை வழிநடத்துவதில் அவரின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் அணி தோற்கும் போதெல்லாம் கேலரியில் உட்கார்ந்து காவியா மாறன் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini trolls Kavya Maran in Jailor audio launch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->