அடடே.. அன்பே சிவம் செட்டில் கமலுடன் தளபதி விஜயா.?! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!
rare and unseen picture of thalapathy vijay with kamal hassan at anbe shivam shooting spot
சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவம். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண், நாசர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நகைச்சுவை படங்களுக்கு மட்டுமே பேர் போன சுந்தர்.சி முதல் முறையாக வித்தியாசமான கதை களத்தில் இயக்கிய படம் அன்பே சிவம். இந்தத் திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.
ஒரு சர்வதேச திரைப்படங்களுக்கு உண்டான அத்தனை இலக்கணங்களுடனும் இந்தப் படம் உருவாகியிருந்தது. படம் வெளியான அந்த காலகட்டத்தில் இந்தத் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது இந்தத் திரைப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாதவனுடைய நடிப்பு கேரியரில் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. தற்போது இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதுவரை யாருமே கண்டிராத அந்த புகைப்படம் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் தளபதி விஜய் உலக நாயகன் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் சூட்டிங் ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கின்ற அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
English Summary
rare and unseen picture of thalapathy vijay with kamal hassan at anbe shivam shooting spot