ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மிக மோசமான நகரமாக மாறிய பெங்களூர்..! - Seithipunal
Seithipunal


ஆசியாவில் போக்குவரத்தில் மோசமான நகரம் என்ற பெயரை கர்நாடக தலைநகர் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.  பணி நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்துசெல்வதால் இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், 'டாம் டிராபிக் இண்டெக்ஸ்' என்ற நிறுவனம் 55 நாடுகளில் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. வாகனத்தின் பயண நேரம், எரிபொருள் செலவு, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவதால் ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகரமாக பெங்களூரு முதலாவதாக தேர்வாகி உள்ளது. 

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள நகரங்கள் பின்வருமாறு;
( 10 கி.மீ.,தூரத்தை கடக்க ஆகும் நேரம்)

02 வது இடத்தில் மஹா.வின் புனே- 27 நிமிடங்கள், 50 நொடிகள்
03 வது இடத்தில் இந்தோனேஷியாவின் மணிலா- 27 நிமிடங்கள், 20 நொடிகள்
04 வது இடத்தில் தைவானின் தைசங்- 26 நிமிடங்கள், 50 நொடிகள்
05 வது இடத்தில் ஜப்பானின் சபோரா - 26 நிமிடங்கள், 50 நொடிகள்
06 வது இடத்தில் தைவானின் கயோசியுங் - 26 நிமிடங்கள்
07 வது இடத்தில் ஜப்பானின் நகோயா - 24 நிமிடங்கள் , 20 நொடிகள்
08 வது இடத்தில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா- 23 நிமிடங்கள் , 20 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.

மேலும், சர்வதேச அளவில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 37 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangalore has become the worst city in Asia for traffic congestion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->