தனது திருமணம் குறித்து தானே வாய்விட்டு கூறிய ராஷ்மிகா மந்தனா.! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திருமணம் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த டாபிக் தான் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

இது குறித்த தகவலை அவர்கள் இருவருமே வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா மற்றும் விஜய்தேவரகொண்டா இருவருமே நிறைய படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் இது முற்றிலும் முட்டாள்தனமான வழக்கமான வதந்தி என்று குறிப்பிட்டார். தற்போது இதுகுறித்து நடிகை ராஷ்மிகாவும், "எனக்கு திருமணம் செய்ய வயது இருக்கிறது. நான் திருமணம் செய்து கொள்ளும் பொழுது உங்கள் அனைவருக்கும் நானே தெரிவிப்பேன்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika manthana about Her marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->