''ராயன்'' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தனுசு தனது 50 ஆவது திரைப்படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்துள்ளார். கடந்த ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக இருந்த இந்த திரைப்படத்திற்கு ''ராயன்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ''ராயன்'' திரைப்படம் வருகின்ற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் செல்வராகவன் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், சந்திப் கிச்சன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்ட்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rayan movie trailer release update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->