விசில் பறக்கவிட்ட ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் வெளியானது.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'ராயன்'. இந்தத் திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்த ராயன் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படத்திற்கு தான் அதிகம். தனுஷ் நடித்த படங்களிலே ராயன் அதிகம் வசூலித்த படமாகும். கடந்த 2024 -ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் படம் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ராயன் படத்தின் 'வாட்டர் பாக்கெட்' வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா முரளி இடையே உள்ள காதல் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rayan movie water packet song vedio released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->