நடிகர் தனுஷ் மீதான ரெட் கார்டு நீக்கம்?...அந்த இரண்டு நிபந்தனை என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ், பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று அவர்களின் படங்களில் நடிக்காமல் இழுத்தடித்ததாகவும், ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், அட்வான்ஸ் தொகையை திருப்பி அளிக்காமல் இருந்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு விதித்தது. இந்நிலையில், தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மெர்சல் பட தயாரிப்பாளர்களுடன் தனது திட்டத்தை விரைவில் தொடங்குவதாகவும், பொல்லாதவன் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பித் தருவது என இரண்டு நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த இரு நிபந்தனைகளை தொடர்ந்து தனுஷ் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Removal of red card on actor Dhanush Do you know what those two conditions are


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->