தமிழக டாஸ்மாக்கில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது - பாஜக தலைவர் அண்ணாமலை.!
tamilnadu bjp leader speech about tn budget
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பெரிசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "தமிழகத்திற்கு பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கலாம். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் கொடுக்க கூட தமிழக அரசிடம் நிதி இல்லை. 1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா ? மதுபான போக்குவரத்து தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் நடைபெற்றது போல தமிழகத்திலும் டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதைவிட அதிகளவில் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன.
செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு பதில் சொல்லும் வரை பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் வரை பாஜக போராட்டம் தொடரும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamilnadu bjp leader speech about tn budget