நிலவரி செலுத்த கோரி பிரபல நடிகைக்கு நோட்டீஸ்.!
revenue department notice to actor aishwarya rai for land tax
தமிழ் சினிமாவில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இந்தி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் நில வருவாய் துறை நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதாவது, நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாசிக் மாவட்டம் சின்னாரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு ஓராண்டாக நில வரி ரூ.21 ஆயிரத்து 960 செலுத்தவில்லை என்றும், பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரியை செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு சின்னார் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.
அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "10 நாட்களுக்குள் நில வரியை செலுத்தாவிட்டால் ஐஸ்வர்யா ராய் மீது நில வருவாய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று அந்த பகுதியில் நிலம் இருந்து வரி செலுத்தாத மேலும் 1200 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
English Summary
revenue department notice to actor aishwarya rai for land tax