ஆஸ்கருக்கு போட்டியிடும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்..! - Seithipunal
Seithipunal


ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர். படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

இப்படத்தை 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட இந்திய தேர்வு குழுவிற்கு படக்குழு அனுப்பிவைத்தனர். ஆனால் இந்திய தேர்வு குழு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படத்தை தேர்வுசெய்தது. 

இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருதில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இடம்பெற செய்ய தனிப்பட்ட முயற்சிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்படத்தை மொத்தம் பதினைந்து பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். அதாவது,

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை, சிறந்த பட தொப்பாளர், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு, சிறந்த ஆடை அமைப்பாளர், சிறந்த  சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணையாளர், சிறந்த காட்சி அமைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  
     


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR movie selected oscar award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->