பட்டுப்புடவையில் பயங்கர லட்சணமாக இருக்கும் சாய் பல்லவி.! பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்.!
Sai pallavi red silk saree photo viral
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாய் பல்லவி. இந்தத் திரைப்படத்திற்கு முன்பு நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார்.
தற்போது அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக மிளிர்ந்து வருகிறார். சாய்பல்லவி தமிழில் தியா படத்தின் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார்.
பின்னர் தமிழில் மாரி 2, என் ஜி கே மற்றும் பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவிக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஃபிடா திரைப்படத்தில் சாய்பல்லவி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் .
தனுஷின் மாரி திரைப்படத்தில் சாய்பல்லவி நடனமாடிய ரவுடி பேபி பாடல் தற்போது வரை மிகப்பெரிய அளவில் ஹிட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி பட்டுப்புடவை உடுத்தி பயங்கர லட்சணமாக இருக்கும் புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
English Summary
Sai pallavi red silk saree photo viral