வாழ்க்கை ஒரு பயணம் என்பதை உணர்த்தியது - அமர்நாத் யாத்திரையில் உருக்கமான பதிவிட்ட சாய் பல்லவி.!
sai pallavi share amarnath yatra travel
வாழ்க்கை ஒரு பயணம் என்பதை உணர்த்தியது - அமர்நாத் யாத்திரையில் உருக்கமான பதிவிட்ட சாய் பல்லவி.!
"பிரேமம்" என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் சாய் பல்லவி. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், நடிகை சாய் பல்லவி சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஜ் கமல் பிலிம்ஸ் தாயாரித்து வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் ரிலீஸ் வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தற்போழுது SK 21 படத்திற்கு பிரேக் விடப்பட்டுள்ளது.
இந்த இடைவேளையில், நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்துடன் அமர்நாத் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகு சில புகைப்படங்களையும் அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதில், "எனது தனிப்பட்ட விஷயங்களை நான் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் இந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய ஒன்று உள்ளது.
என் பெற்றோரை இப்படி ஒரு பயணத்திற்கு அழைத்து வருவதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மலையும், குன்றும் ஏற முடியாமல், நடக்க முடியாமல் களைப்பாக இருந்தது. அப்படி சோர்வடையும் ஒவ்வொரு முறையும், நடக்க முடியாது என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை அனைவரும் உச்சரிக்கிறார்கள்.
அது ஒரு முழக்கமாக மாறுகிறது. அந்தப் பயணத்தின் போது அந்தப் பெயரே பிரபலமானது. என்னைப் போன்ற பல பக்தர்களுக்காக இந்த யாத்திரையை பாதுகாப்பாக நடத்தியதற்காக வாரியத்திற்கு நன்றி. சுயநலம் இல்லாமல் உழைக்கும் ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் காவல் துறைக்கு நன்றி.
அவர்கள் எப்போதும் நம்மைப் பாதுகாக்கிறார்கள். தன்னலமற்ற சேவை செய்யும் இடமாக பெரும் பெயர் பெற்றது. மற்றவர்களுக்கு சேவை செய்வதே நம் வாழ்வின் இறுதி அர்த்தம். இந்த யாத்திரை எனது விருப்பத்தை சவால் செய்தது. என்னையும், என் உடலையும் சோதித்தது.
மேலும், வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை உணர்த்தியது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாவிட்டால் வாழ்க்கைப் பயணத்தில் செத்துப்போவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
sai pallavi share amarnath yatra travel