நடிகர் விஜய் திரைப்பட வில்லன் காலமானார்.!
Salim Ghouse pass away
பிரபல தமிழ் நடிகர் சலீம் கவுஸ் (வயது 70) இன்று காலமானார்.
தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர் சலீம் கவுஸ் (வயது 70) இன்று காலமானார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த சலீம் கவுஸ் (70) மும்பையில் இன்று காலமானார்.
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவரான சலீம் அகமது கவுஸ் எனும் சலீம் கவுஸ் மேடை நாடகங்கள், டிவி சீரியல் நடித்தபின், 1978ல் ஸ்வர்க் நராக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் கமல்ஹாசன், பிரபு நடித்த 'வெற்றி விழா' படத்தில் 'ஜிந்தா' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சின்னக் கவுண்டர், தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.