அதிர்ச்சி!...திருப்பூரில் வங்கதேச தொழிலாளர்களுக்கு போலி ஆதார் கார்டு பெற்றுக்கொடுத்தவர் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்களில் சிலர் போலி ஆதார் கார்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீஸ் நடத்திய தொடர் விசாரணையில்,  திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்த மாரிமுத்து என்பவர், வங்கதேசத்தில் இருந்து வரும் தொழிலாளர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.

மேலும், வங்கதேச தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வரும் புரோக்கர்கள் போலியாக ஆதார் கார்டு பெற மாரிமுத்துவை அணுகுமாறு தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு மருத்துவர், இ-சேவையில் உள்ள பெண் பணியாளர் மற்றும் பான் கார்டு வாங்கி கொடுத்த வாலிபர் என 3 பேரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாரிமுத்து பேக்கை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதில் போலியாக ஆதார் கார்டு பெற 200 விண்ணப்பங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock a person who gave fake aadhaar card to bangladesh workers was arrested in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->