பாலிவுட் குயினை ஆடியோ லாஞ்சுக்கு அழைத்த அண்ணாச்சி.. இறுதி நேரத்தில் ஜகா வாங்கிய நடிகை.! - Seithipunal
Seithipunal


பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், லெஜண்ட் சரவணன் தான் நிச்சயமாக இரண்டாவதாக ஒரு படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 

ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட பிரபல நடிகைகள் இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் 'தி லெஜண்ட்' ஒரு பான் இந்தியா வெளியீடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்புக்குழு எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து பிரபல இரட்டையர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக உர்வசி ரவுடேலா நடித்திருக்கிறார்.

மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ ஷங்கர், யோகி பாபு, பிரபு, நாசர், மயில்சாமி, சிங்கம்புலி போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மூன்று வருட இடைவெளிக்கு பின் இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் 'தி லெஜன்ட்' படத்தின் ஆடியோ விழா நடைபெற்ற நிலையில், பலரும் கலந்துகொண்டு படத்தைப் பற்றியும் அண்ணாச்சியை பற்றியும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த ஆடியோ விழாவிற்கு கிட்டத்தட்ட 6.50 கோடி வரை செலவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. திரை வட்டாரத்தில் விசாரித்தபோது ஆடியோ விழாவில் கலந்து கொண்ட நடிகைகளுக்கு கணிசமான தொகை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் அண்ணாச்சி பாலிவுட்டில் இருந்து நடிகை கத்ரீனா கைஃபை விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டுள்ளது. அவர் வருவதற்கு 3 கோடி வரையில் பணம் பேசப்பட்ட நிலையில் முன்பண தொகையும் கொடுத்துள்ளனர். ஆனால் சொன்ன தேதியில் அவரால் வரமுடியாத காரணத்தால், கத்ரினா அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saravanan arul invite Katrina life to audio launch


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->