கார்த்தி நடிப்பில் ''சர்தார் 2'' ஷூட்டிங் அப்டேட்!
Sardaar 2 shooting update
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த 'சர்தார்' ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான பணிகளில் பி.எஸ். மித்ரன் இருப்பதாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சர்தார் 2 படபிடிப்பு ஜூலை மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாகவும் இந்த திரைப்படம் கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ள திரைப்படமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். நடிகர் கார்த்தி தற்போது வா வாத்தியார், மெய்யழகன் என இரண்டு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sardaar 2 shooting update