சென்னை: சர்தார்-2 ஷூட்டிங்கில் விபரீதம்: பலியான சண்டை பயிற்சியாளர்! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்திக் நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின் போது, சண்டை பயிற்சியாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் இன்று காலை கார்த்திக் நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய நாள் படப்பிடிப்பில் படத்தின் சண்டை காட்சி ஒன்றுக்காக செட் அமைக்கப்பட்டு, ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது சுமார் 20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் தவறி கீழே விழுந்தார். மேலிருந்து அவர் கீழே விழுந்ததில் அவரின் மார்பு பகுதி அடிபட்டதாகவும், இதனால் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முதல் கட்ட தகவலின் படி, இந்த சண்டைக் காட்சிக்காக சண்டை பயிற்சியாளர் ஏழுமலை எந்த வித உபகரணமும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sardar 2 shooting spot accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->