சார்பட்டா பரம்பரை 'டாடி' ஜான் விஜயின் மனைவி, அந்த அரசியல் பிரபலத்தின் மகளா.?!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் ஜான் விஜய். இவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறினார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 

வில்லன் கதாபாத்திரத்தில் தனது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் அனைவரையும் சிரிக்க வைத்து மிரட்டியிருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் அவர் நடித்து இருந்தார். 

இது அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதில் ஆர்யா, பசுபதி, ஆகியோர் நடித்திருந்தனர். இவரது கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜான் விஜய்யின் டாடி கதாபாத்திரம் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார். இந்த நிலையில், தற்போது இவருடைய மனைவி குறித்த பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது. டி.கே.எஸ் இளங்கோவன் மகள்தான் ஜான் விஜய்யின் மனைவி மாதவி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். இவர்களது குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarpetta Dadi John vijay wife History


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->