உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம் ... தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி!
Christmas celebrations around the world Special Mass in Churches
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி உலகம் முழுவதும் நள்ளிரவு முதல் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
உலக அளவில் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது . டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி விடும் . அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும்இன்றுகொண்டாடப்பட்டடுவருகின்றது.அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மெனி,பிரான்ஸ்,இத்தாலி,உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
அதேபோல இந்தியா முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் ,வேளாங்கன்னி ,சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை சாந்தோம் பேராலயம் வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் ,நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கியும்,ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.
வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு திருப்பலியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றுள்ளார். கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.மதுரையில் பழமைவாய்ந்த கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
English Summary
Christmas celebrations around the world Special Mass in Churches