பரபரப்பு விளக்கம்!...அமரன் படம் சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்டது!...விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்'. திரைப்படத்திற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளில், நடிகர் தனுஷ் நடிப்பின் வெளியான அசுரன் திரைப்படத்தை விட அமரன் திரைப்படம் ஒரே நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அதே சமயம் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், அமரன் படம் என் சொந்த கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்றும், உண்மை சம்பவத்தை தழுவி சமூக பொறுப்புடன் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும், ராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகே இந்த படத்தை இயக்கியதாகவும், படத்தில் இடம்பெற்ற 'பஜ்ரங் பாலி கி ஜெய்' முழக்கம் அவர்களின் பிரத்தியேக முழக்கம்" என்று கூறியுள்ளார்.

அதே போல்,  'பஜ்ரங் பாலி கி ஜெய்' என முழக்கமிடுவது ராஜ்கோட் ரெஜிமென்ட்டின் பிரத்யேக முழக்கம் என்றும், அதை மாற்றி படம் எடுக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sensational description amaran film was made with social responsibility director rajkumar periyasamy put an end to criticism


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->