நடிகர் சந்தானத்துடன் இணையும் சின்னத்திரை நடிகை.!
serial actor rathika preethi joined actor santhanam movie
தமிழ் சினிமாவில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்த நடிகர் சந்தானம் தற்பொழுது கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய அடுத்த படத்தில் சின்னத்திரை நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அதன் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' சீரியலில் கதாநாயகியாக நடித்த ராதிகா ப்ரீத்தி தற்போது நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக '80ஸ் பில்டப்' என்ற புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கல்யாண்குமார் இயக்கம் இந்தப் படத்தில், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், டைகர் கார்டன் தங்கதுரை, கூல் சுரேஷ் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
எண்பதுகள் காலக்கட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் டீசருக்கு ரசிகர்கள் வரவேற்புக் கொடுத்து வருகின்றனர்.
English Summary
serial actor rathika preethi joined actor santhanam movie