அம்மாவான பிரபல சீரியல் நடிகை நக்ஷத்திரா.. அவரே வெளியிட்ட பதிவு.. என்ன குழந்தை தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்திரா பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் நக்ஷத்திரா. இதில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார்.

 இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுடைய மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

அதனைத்தொடர்ந்து 'கிடாரி பூசாரி மகுடி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக தனது கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seriel actress nakshatra get girl baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->