பாலியல் புகார் : மலையாள நடிகர் ஜெயசூர்யா ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் குழு,  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல்  புகார்கள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் மேற்கு வங்க மாநில நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகர், இயக்குனர் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் மீது பகிரங்க பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதேபோல், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொது செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி பாலியல் புகார் கூறினார்.  இதுவரை,  இயக்குனர்கள் ரஞ்சித், துளசிதாஸ், வி.கே. பிரகாஷ் மற்றும் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், பாபுராஜ், முகேஷ், ஜெயசூர்யா, மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் நோபல், விச்சு, விளம்பர இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது மேலும் ஒரு நடிகை, நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் அவர் மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual complaint Malayalam actor Jayasuriya filed a case under the non bailable section


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->