இயற்கைக்கு மாறான மரணம்..? பாடகர் கேகே-வின் மரணத்தில் திடீர் திருப்பம்.! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவரான கேகே-வின் திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட பல இந்திய மொழி படங்களின் பாடல்களைப் பாடியுள்ள கேகே., மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும், இது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் கொல்கத்தா நியூ மார்க்கெட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு பதிவு குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"படைக்க கேகே-வின் உடல் இன்று கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவரின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் உள்ளன. இருப்பினும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். 

அவர் தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.  பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளனர். 

கொல்கத்தா வந்துள்ள பாடகர் கே.கே.வின் குடும்பத்தினர்களிடன் அவரது உடலை காண்பித்த பிறகு, பிரேத பரிசோதனை நடக்க உள்ளது. பிற்பகலில் அவரது உடலை குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singer KK Death Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->