"இப்ப செல்ஃபி எடு பாக்கலாம்.?" ரசிகரின் செல்போனை பிடுங்கிய சித்தார்த்.! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை சென்னையில் தமிழக அரசின் சின்னத்திரை மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் இதில் தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, விக்ரம், சித்தார்த் மற்றும் ஜீவா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டனர். 2014 இல் வெளியான காவியத்தலைவன் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, அவர் பேசிய போது, "உண்மையான கலைக்கு விருதும் பாராட்டும் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். அது இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. எட்டு வருடங்களுக்குப் பின் எங்களது உழைப்பிற்கு இந்த மாதிரி ஒரு விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. அரசு ஒரு நடிகருக்கு விருது வழங்குவது என்பது மிகப் பெரிய பாக்கியம். எட்டு வருடங்களுக்குப் பின் அதுக் கிடைத்திருப்பது அற்புதம். எனவே, இந்த விருதுக்கு நன்றி." என்று தெரிவித்தார். 

அதன் பின் நிகழ்ச்சியில் இருந்து சித்தார்த் வெளியேறிய போது நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயற்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த நடிகர் சித்தார் அவரது செல்போனை பறித்துக் கொண்டார். இது குறித்து, சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sitharth angry with Fan in award function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->