வெங்கட் பிரபுவுடன் இணையும் பிரபல நடிகர்..! - Seithipunal
Seithipunal


தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் நாளை வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில்,  சிவகார்த்திகேயன் நாளை வெளியாகவுள்ள ப்ரின்ஸ் படத்திற்காக ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

அதில், இயக்குநர் வெங்கட் பிரபு, "நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்" என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் "ஷூட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார். ஆனா கதை எப்ப சார் கேட்கலாம். உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார். அந்த படத்துல பிரேம்ஜி பிரதருடன் நான் எந்த ரோலில் நடிக்கிறேன். அத தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கேன் சார்" என்று பதிலளித்துள்ளார். 

வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் வழக்கமாக அவரது தம்பி பிரேம்ஜி இடம் பெற்றுவிடுவார். அதனை கேலி செய்யும் விதமாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார் . 

முன்பு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இதே போன்று வெங்கட் பிரபுவை சிவகார்த்திகேயன் கலாய்த்திருப்பார். அதில், "இவர் கதை இல்லாமல் கூட படமெடுப்பார். ஆனால் தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார். பேசாம...இவருக்கு தம்பியா பிறந்திருக்கலாம் போல..." என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே பேசியிருப்பார்" என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதன் மூலம், சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைய இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில்  நடைபெற்ற ‘ப்ரின்ஸ்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது குறிப்பிடத்தக்கது ஆகும். 

தற்போது, வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து இயக்கி வரும் 'என்.சி 22'. இந்தப் படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan acting next movie in directer vengat prabhu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->