சிவகார்த்திகேயனின் நியூ லுக்! எந்த படத்திற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் 'மாவீரன்' என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இதனை தொடர்ந்து கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 21' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இதற்காக சிவகார்த்திகேயன் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார். இளமை தோற்றத்தில் உள்ள அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan New Look viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->