அயலான் படம் குறித்து SK கொடுத்த அப்டேட்! கொண்டாடும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


இன்று நேற்று நாளை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ளனர். அயலான் படத்தில் 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அயலான் திரைப்படம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகவுள்ளது. கடந்த 2017ல் தொடங்கப்பட்டபோது இருந்த பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது. 24AM நிறுவனம் தயாரித்த அயலான் பின்னர் KJR ஸ்டூடியோஸ் பேனருக்கு மாறியது. அதன் பின்னர் தான் அயலான் படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் "அதெல்லாம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தின் போஸ் புரொடக்ஷன் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்பொழுது ஏ.ஆர் ரகுமான் தனது இசை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் அயலான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அயலான் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான், விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி படங்களும் தீபாவளிக்கு வெளியாக தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan said music composition work started in ayalaan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->