வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லன் யார் தெரியுமா.?! இது செம்ம சூப்பர் தகவல்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. கதை மிகவும் பழைய கான்சப்ட் என்று பலரும் கழுவி ஊற்றினர். 

இதனை தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். நேரடியாக தெலுங்கில் உருவாகும் இந்த படம் தென்னிந்திய மொழிகளில் உருவாக்கம் செய்யப்படுகிறது.

 இதனை தில் ராஜு தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். இதில், நடிகர்கள் சரத்குமார், சஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sj Surya may villain In varisu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->