"அவருக்காக தான் காத்திருக்கேன்.. அடுத்து கல்யாணம் தான்." சோனியா அகர்வால் ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


நடிகை சோனியா அகர்வால் தனது மறுமணம் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனை கடந்த 2006 திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்று நான்கு வருடங்களுக்குப் பின் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.

அடிக்கடி சோனியா அகர்வாலுக்கு மறுமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி  சர்ச்சையாகும். சமீபத்தில் கூட அவரது மறுமணம் குறித்து பேசப்பட்டது. இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம் மறுமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது சோனியா அகர்வால், "நான் இன்னும் எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன்." என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பொருத்தமான நபரை சந்தித்தால் அவரை திருமணம் செய்து கொள்வேன். அந்த நபருக்காக தான் நான் காத்திருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia aggrawall open talk about his Second Marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->